நிர்வாண சர்ச்சை. பத்திரிகையாளரை விளாசிய ராதிகா ஆப்தே

  • IndiaGlitz, [Wednesday,October 05 2016]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக இணணயதளங்களில் 'Parched' என்ற பாலிவுட் படத்தில் இடம்பெற்ற அடில் ஹுசைன் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர்களின் படுக்கையறை காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட ராதிகா ஆப்தேவிடம் பத்திரிகையாளர் ஒருவர் இந்த நிர்வாண வீடியோ குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார்.
இதற்கு பதில் கூறிய ராதிகா ஆப்தே, "மன்னிக்கவும். உங்களது கேள்வி கேலிக்குரியதாக உள்ளது. சர்ச்சைகளை வேறு யாரும் உருவாக்குவதில்லை. உங்களைப் போன்றவர்களால் தான் உருவாக்கப்படுகிறது. நீங்கள் அந்த வீடியோவைப் பார்த்து, அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்கள். ஆகையால் நீங்கள் தான் சர்ச்சையை ஏற்படுத்துகிறீர்கள்
நான் ஒரு நடிகை. ஒரு திரைப்படத்திற்கு என்ன தேவையோ அதை செய்ய வேண்டியது எனது பணி. ஒரு திரைப்படம் நன்றாக வருவதற்கு என்ன செய்யச் சொன்னாலும் நான் செய்வேன். நீங்கள் குறுகிய கூட்டைவிட்டு வெளியே வந்து உலக சினிமாவை கவனித்து பாருங்கள். அவ்வாறு பார்த்தீர்கள் என்றால் இந்தக் கேள்வி உங்களிடம் இருந்து எழுந்திருக்காது.
தங்களுடைய உடலை அவமானமாக கருதுபவர்களே அடுத்தவர்கள் உடலை பார்க்க ஆர்வமாக இருப்பார்கள். உங்களுக்கு நிர்வாண உடம்பை பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தால் என்னுடைய வீடியோவை பார்ப்பதற்கு பதிலாக உங்களை நீங்களே கண்ணாடி முன்பு நிர்வாணமாக நின்று பார்த்துக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு நாம் இதுகுறித்து பேசலாம்' என்று விளாசினார்.
ராதிகா ஆப்தேவின் பதிலை சக பத்திரிகையாளர்களே பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பவர்பாண்டி' படத்தை பார்த்து பாராட்டிய தனுஷின் குரு

தனுஷ் இயக்குனராக அறிமுகமாகியுள்ள 'பவர்பாண்டி' படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக நடந்து வருகிறது. ...

விஜய் ஆண்டனி எடுத்த மாஸ் நடிகர்களின் முயற்சி

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் மாஸ் நடிகர்கள் மட்டுமே இரட்டை வேடம் என்னும் முயற்சியை எடுப்பார்கள். இரண்டு ...

ஒரே தயாரிப்பு நிறுவனத்துக்காக விஜய்-தனுஷ்

ஒரே நேரத்தில் இளையதளபதி விஜய்யின் 'தெறி' மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' ஆகிய படங்களை தயாரித்து...

இன்று முதல் சமுத்திரக்கனியின் 'ஆண் தேவதை' ஆரம்பம்

சமுத்திரக்கனி இயக்கி, தயாரித்து, நடித்த 'அப்பா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில்...

சசிகுமாருக்கு ஜோடியாகும் பழம்பெரும் நடிகரின் பேத்தி

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா, ராதாமோகன் இயக்கி வரும் 'பிருந்தாவனம்' என்ற படத்தில் அருள்நிதியுடன் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்