பிகினிக்காக 10 கிலோ எடையை குறைத்த பிரபல நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய ராய்லட்சுமி பாலிவுட்டில் ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'அகிரா' படத்தில் அறிமுகமானபோதிலும், தற்போது 'ஜூலி 2' என்ற பாலிவுட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ராய்லட்சுமியின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்தது. இதில் ராய்லட்சுமி டாப்லெஸ் போஸ் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த நிலையில் தற்போது இந்த படத்தில் அவர் பிகினி உடையிலும் நடிக்கவுள்ளதாகவும் பிகினி காட்சிகளுக்கான கடந்த இரண்டு மாதங்களில் 10 கிலோ எடையை அவர் குறைத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் துபாய் மற்றும் ராஜஸ்தானில் படமாக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். தீபக் ஷிவ்தாசனி இயக்கி வரும் இந்த படத்திற்கு விஜூ ஷா இசையமைக்கின்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments