நடிகை பூஜாவின் திருமண குழபத்திற்கு விடை கிடைத்ததா?
Send us your feedback to audioarticles@vaarta.com
மாதவன் நடித்த 'ஜேஜே' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் அஜித்தின் 'அட்டகாசம்' , பாலாவின் 'நான் கடவுள்' உள்பட பல படங்களில் நடித்த நடிகை பூஜாவுக்கு, கடந்த 2014ஆம் ஆண்டு தீபக் சண்முகநாதன் என்ற மாடல் இளைஞருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்ததாக கூறப்பட்டது. இவர்களது திருமணம் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெறும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது கசிந்துள்ள புதிய புகைப்படங்களின்படி நடிகை பூஜா இலங்கையின் பிரபல தொழிலதிபர் பிரஷன் டேவிட் வித்தகன் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து பூஜாவிடம் இருந்து உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவரவில்லை. ஒருவேளை இந்தத் தகவல் உண்மை என்றால் பூஜாவின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய நமது வாழ்த்துக்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com