close
Choose your channels

சசிகுமாரின் 'கிடாரி' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி

Friday, July 1, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'தாரை தப்பட்டை', வெற்றிவேல்' படங்களை அடுத்து சசிகுமார் நடிப்பில் பிரசாந்த் முருகேசன் இயக்கி வரும் 'கிடாரி' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சசிகுமார் தயாரித்து வரும் இந்த படத்தில் வெற்றிவேல்' நாயகி நிகிலா மீண்டும் சசிகுமாருக்கு ஜோடி சேருகிறார்.
மேலும் பிரபல நடிகர் நெப்போலியன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் தயாராகிவிட்டதாகவும் ஜூலை 2ஆம் தேதி அதாவது நாளை இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் 'ராஜதந்திரம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த தர்புகா சிவா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ப்ரவீன் அந்தோணி படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment