close
Choose your channels

அதிமுகவில் இணைந்தாரா நயன்தாரா?

Tuesday, August 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நாயகியான நயன்தாரா, விரைவில் அரசியலில் குதிக்கவுள்ளதாகவும், அவர் அதிமுகவை நோக்கி செல்வதாகவும் ஒருசில ஊடகங்கள் வதந்தியை சிலமணி நேரங்களாக பரப்பி வருகின்றன. இதற்கு காரணம் நேற்று சென்னையில் நடந்த 'அம்மா ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன்' நடத்திய விழா ஒன்றில் அவர் கலந்து கொண்டதுதான்
நேற்று மெட்ராஸ் பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்ற 'அம்மா ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன்' நடத்திய விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா விளையாட்டு வீரர்களுக்கு தனது ஃபேவரைட் புன்னகையுடன் விருதுகளை கொடுத்தார். இந்த விழாவில் விஸ்வநாதன் ஆனந்த், பி.டி.உஷா, வாசுதேவ் பாஸ்கரன், ஸ்ரீகாந்த் உள்பட பல விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
அம்மா ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன்' விழாவில் கலந்து கொண்டதற்காக அம்மாவின் கட்சியில் சேரவுள்ளதாக ஒருசில ஊடகங்கள் வதந்தியை கிளப்பி விட்டுள்ளதாகவும், உண்மையில் அவருக்கு அரசியலில் சிறிதும் ஆர்வம் இல்லை என்றும் தென்னிந்திய மொழிகளில் இன்னும் அவர் பிசியாக இருப்பதால் அவர் நடிப்பை தவிர வேறு எந்த துறையிலும் கால்பதிக்க வாய்ப்பில்லை என்றே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment