விக்னேஷ் சிவன் பிரிவு குறித்து உறுதி செய்த நயன்தாரா

  • IndiaGlitz, [Monday,June 20 2016]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் 'நானும் ரெளடிதான்' இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில மாதங்களாக காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக இருவரும் கருத்துவேறுபாடுகள் காரணமாக பிரிந்துவிட்டதாகவும், நயனின் மூன்றாவது காதலும் தோல்வி அடைந்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இதுகுறித்து எவ்வித கருத்தையும் நேரடியாமல் நயன், விக்னேஷ் சிவன் ஆகிய இருவருமே தெரிவிக்காத நிலையில் தற்போது மறைமுகமாக தங்கள் நிலையை இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த சனியன்று ஐதராபாத்தில் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற நயன்தாரா, விருதுடன் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் போஸ் கொடுத்துள்ளார். இந்த போஸ் இருவரின் கெமிஸ்ட்ரியை மேலும் உறுதிப்படுத்தியதோடு, பிரிவு வதந்தியை பரப்பிய ஊடகங்களுக்கு பதிலாகவும் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.