close
Choose your channels

'ரேணிகுண்டா' இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி?

Thursday, September 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த படங்கள் கிட்டத்தட்ட மாதத்திற்கு ஒரு படம் ரிலீஸ் ஆகி வருகிறது. அதேபோல் மாதத்திற்கு ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டும் வருகிறார்.
விஜய்சேதுபதி தற்போது தனுஷுடன் 'வடசென்னை', கே.வி.ஆனந்த் இயக்கும் படம், இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2', நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' இயக்குனரின் அடுத்த படம், ஆகியவற்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த 'ரேணிகுண்டா' படத்தின் இயக்குனர் ஆர்.பன்னீர்செல்வம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். விறுவிறுப்பான த்ரில் படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment