ஜி.வி.பிரகாஷ்: முதலில் இசையமைப்பாளர், பின்னர் நடிகர் தற்போது இயக்குனர்?

  • IndiaGlitz, [Saturday,July 09 2016]


கோலிவுட் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ், 'டார்லிங்' படத்தின் மூலம் நடிகரானார். அந்த படத்தின் வெற்றியால் அவருக்கு அடுத்தடுத்த படங்கள் குவிந்தது. அவரது இரண்டாவது படமான 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படமும் வெற்றி பெற்றதால் கோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் பட்டியலிலும் அவரது பெயர் இருந்தது.
தற்போது அவர் 'புரூஸ்லீ, கடவுள் இருக்குறான் குமாரு, ராஜீவ் மேனன் படம், என நடிகராகவும் பிசியாக உள்ளார். இந்நிலையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தில் ஜி.வி.பிரகாஷ் இயக்குனர் வேடத்தில் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக நடிக்கும் 'கயல்' ஆனந்தி நடிகையாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த படத்தில் நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், ஆர்ஜே பாலாஜி, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா , சிங்கம்புலி, ரோபோ சங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.