அஜித்துடன் பிறந்த நாளை கொண்டாட வேண்டும். பிரபல நடிகையின் ஆசை

  • IndiaGlitz, [Wednesday,October 19 2016]

கோலிவுட் நடிகர், நடிகைகள் மட்டுமின்றி பிற மொழி நட்சத்திரங்களும் அஜித்துடன் ஒரே ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற கனவை சுமந்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது வெளிவரும் பேட்டிகளில் இருந்து தெரிந்து கொள்கிறோம்.
இந்நிலையில் பிரபல கன்னட நடிகை ஹர்ஷிகா பூனச்சா (Harshika Poonacha ) சமூக வலைத்தளம் ஒன்றில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோது, 'தல அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. மேலும் என்னுடைய பிறந்த நாளை ஒருமுறையாவது தல அஜித்துடன் கொண்டாட விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார். தல அஜித் பிறந்த மே 1ஆம் தேதிதான் ஹர்ஷாவுக்கும் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஷர்சிகா விரைவில் ஜெய்க்கு ஜோடியாக ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படம் குறித்த பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

விஜய் படத்தில் சன்னிலியோன் நடிக்காதது ஏன்?

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய நிலையில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தில் ஒரு ஐட்டம் நடனம் ஆட சன்னிலியோனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது

விஷாலுடன் இணைந்த விஜய் ஆண்டனி

விஷால், தமன்னா, நடிப்பில் சுராஜ் இயக்கிய 'கத்திச்சண்டை' திரைப்படம் தீபாவளி நாளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த படம் நவம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு 'த்ரிஷ்யம்' ஆகிறது மோகன்லாலின் 'புலிமுருகன்'

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த 'புலிமுருகன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

விஜய் இடத்தை பிடித்த விஷால்-கார்த்தி

பாலிவுட்டில் இருந்து மீண்டும் கோலிவுட்டுக்கு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திரும்பிய பிரபுதேவா, மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மீண்டும் விக்னேஷ் சிவனுடன் இணைந்த நயன்தாரா

'நானும் ரெளடிதான்' படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.