சசிகுமாரின் 'கொடிவீரன்' படத்தில் முதன்முதலாக பிரபல நாயகி

  • IndiaGlitz, [Thursday,March 16 2017]

'குட்டிப்புலி' இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளார் என்பதும் அந்த படத்தின் டைட்டில் 'கொடிவீரன்' என்பதும் ஏற்கனவே அறிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

'கொடிவீரன்' படத்தில் கோலிவுட்டின் பிரபல நாயகி ஹன்சிகா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தூள்ளது. விஜய், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி உள்பட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த ஹன்சிகா, முதன்முதலில் சசிகுமாருடன் ஜோடி சேருகின்றார் என்பதும் அதேபோல் முதன்முதலாக முன்னணி நாயகி ஒருவருடன் சசிகுமார் குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் இயக்குனர் முத்தையா இயக்கவுள்ள இந்த படத்தை சசிகுமாரின் 'கம்பெனி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.