பாவனா தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளி கோவையில் பதுங்கலா?

  • IndiaGlitz, [Wednesday,February 22 2017]

பிரபல நடிகை பாவனா கடந்த வாரம் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து அவரை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியது. இது குறித்த வழக்கில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவர்கள் என்று கூறப்படும் சுனில் மற்றும் விகேஷ் ஆகியோர் கோவையில் தலைமறைவாக பதுங்கியிருப்பதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோவை வந்த கேரள போலீஸ் அங்குள்ள முக்கிய ஹோட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். இதற்கிடையில் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

More News

அடக்கி வாசிக்க நினைத்தேன். ஆனால் பேச வைக்கின்றார்கள். கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் நிகழ்வுகள் குறித்து தனது ஆக்கபூர்வமான கருத்துக்கலை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்.

புதிய தமிழக அரசுக்கு சத்யராஜ் வைத்த முக்கிய கோரிக்கை

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தற்போது ஆட்சி செய்து வருகிறது.

சமந்தாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய திருமண ரத்து செய்தி?

பிரபல நடிகை சமந்தாவுக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்பதும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது என்பதும் தெரிந்ததே....

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த வழக்கு. திமுகவுக்கு ஏமாற்றம்

கடந்த 18ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது அரசுக்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சிகள் அமளி செய்ததால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்கள் அனைவரும் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்...

தமிழக பொறுக்கிகளை டார்கெட் செய்யும் ஐ.எஸ் தீவிரவாதிகள். மீண்டும் சு.சுவாமியின் சர்ச்சை

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழர்களை பொறுக்கி என்று கூறுவது உள்பட அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இன்று மீண்டும் தனது சமூக வலைத்தளத்தில் தமிழர்கள் குறித்த சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்...