முதன்முதலாக சீனியர் நடிகருக்கு ஜோடியான அமலாபால்

  • IndiaGlitz, [Friday,September 09 2016]

கோலிவுட் திரையுலகில் நடிக்கத்தெரிந்த மிகக்குறைந்த நடிகர்களில் ஒருவராகிய அமலாபால், சமீபத்தில் தனுஷூக்கு ஜோடியாக 'வடசென்னை' படத்தில் கிளாமர் ரோலில் நடித்து வரும் நிலையில் சீனியர் நடிகரான சத்யராஜூக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.
தொழிலதிபர் மற்றும் தீவிரவாதிகளை பிடிக்கும் சிறப்பு படைத்தலைவர் என சத்யராஜ் இருவேடங்களில் நடித்துள்ள 'முருகவேல்' படத்தில் சிறப்பு படைத்தலைவர் கேரக்டரில் நடித்துள்ள சத்யராஜூக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். மேலும் இவருடைய கேரக்டரும் தீவிரவாதிகளை பிடிக்கும் படை உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமலாபால் இதுவரை இளம் ஹீரோக்களுக்கு மட்டுமே ஜோடியாக நடித்துள்ள நிலையில் முதன்முதலாக இந்த படத்தில் சீனியர் நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோகன்லால் நடித்த சூப்பர் ஹிட் படமான 'லைலா ஓ லைலா' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் கஞ்சா கருப்பு ஆட்டோ டிரைவர் வேடத்தில் காமெடி செய்துள்ளார். ஜோஷியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.