விஷ்ணுவுடன் முதன்முறையாக இணையும் அமலாபால்

  • IndiaGlitz, [Thursday,November 24 2016]

இயக்குனர் விஜய்யுடன் விவாகரத்து குறித்த அறிவிப்பை சமீபத்தில் அறிவித்த நடிகை அமலாபால், தற்போது கோலிவுட்டில் அதிக வாய்ப்புகளை பெற்று வருகிறார். ஏற்கனவே தனுஷூடன் 'வடசென்னை' மற்றும் 'விஐபி 2' ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அமலாபால், சுசிகணேசன் இயக்கவுள்ள 'திருட்டுப்பயலே 2' படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமாரின் அடுத்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.. க்ரைம் த்ரில்லர் படமான இந்த படத்தில் அமலாபாலுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என்றும் அவரது நடிப்புத்திறமையை முழு அளவில் வெளிப்படுத்தும் கேரக்டர் என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர்.
இந்த படத்தில் அமலாபால் நடிக்கவுள்ளது குறித்து இயக்குனர் ராம்குமார் கூறியபோது, 'இந்த படத்திற்கு ஒரு ஹோம்லி லுக் நாயகி தேவைப்பட்டார். அமலாபால் இந்த கேரக்டருக்கு மிகச்சரியாக பொருந்துவார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்தோம். நவம்பர் 29 முதல் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம்.
மேலும் இந்த படத்தில் இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒரு வித்தியாசமான வில்லனை அறிமுகப்படுத்த போகிறேன். போலீஸ் வேடத்தில் விஷணுவிஷால் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். சங்கர் ஒளிப்பதிவில் கோபி கலை இயக்கத்தில், உருவாகும் இந்த படத்தில் காளிவெங்கட், முண்டாசுப்பட்டி' ராம்தாஸ் ஆகியோர்களும் நடிக்கவுள்ளனர்.

More News

ஏ.டி.எம்-இல் பணம் நிரப்ப சென்ற வேன் திடீர் மாயம். ரூ.1.37 கோடி எங்கே?

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து அனைத்து ஏ.டி.எம்.களிலும் ரூபாய் நோட்டு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதன் காரணமாக இரவுபகலாக இந்தியாவில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் பணம் நிரப்பும் பணி நடந்து வருகிறது.

'கிக்' பட சர்ச்சை. லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு

நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஏற்கனவே ரஜினிமுருகன்' படத்தில் இடம்பெற்ற 'என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா' பாடலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் வெளியான 'கிக்' என்ற 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தில் இடம்பெற்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் 'சொல்வதெல்லாம் உண்மை' நி&#

விஜய்யின் அணுகுமுறையை ரஜினியிடம் எதிர்பார்த்தேன் : அமீர்

பிரதமர் நரேந்திரமோடி கருப்புப்பணம் மற்றும் கள்ளநோட்டை ஒழிப்பதற்காக சமீபத்தில் எடுத்த அதிரடி நடவடிக்கையான ரூ.500, ரூ.1000...

ரூபாய் நோட்டுக்கு எதிரான போராட்டத்தில் சூப்பர் ஸ்டாரின் மனைவி

பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில்...

சுசீந்திரனின் 'மாவீரன் கிட்டு' சென்சார் தகவல்கள்

'வெண்ணிலா கபடிக்குழு', பாண்டியநாடு', 'ஜீவா உள்பட வெற்றிபடங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன்...