ஒவ்வொரு இரவுக்கு ஒரு பெண்ணை அனுப்பு: லேடீஸ் ஹாஸ்டல் வார்டன் அளித்த அதிர்ச்சி புகார்!
- IndiaGlitz, [Friday,August 12 2022]
ஹாஸ்டல் வார்டன் ஒருவர் ஒவ்வொரு இரவுக்கும் ஒரு பெண்ணை அனுப்பு என தன்னை கட்டாயப்படுத்தியதாக அதிகாரி ஒருவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஷிவ்புரி என்ற பகுதியை சேர்ந்த அரசு விடுதி பெண் வார்டன் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் பிரமாண பத்திரத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ஹாஸ்டலில் உள்ள பெண்களை ஒவ்வொரு இரவிலும் ஒருவரை அனுப்ப வேண்டும் என்று அதிகாரி ஒருவர் கட்டாயப்படுத்தியதாக கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனது பங்களாவுக்கு தினந்தோறும் ஒரு பெண்ணை அனுப்பி விட்டு மறுநாள் காலையில் அவரை அழைத்துச் செல்லும்படி அந்த அதிகாரி தன்னிடம் கூறியதாக காவல்துறையில் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் அந்த பெண் வார்டன் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் சம்பந்தப்பட்ட ஹாஸ்டலில் சோதனை நடைபெற்றதாகவும் அந்த சோதனையில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்றும், இதனை அடுத்து அந்தக் குற்றச்சாட்டுகளை திசை திருப்புவதற்காக பொய்யான புகாரை ஹாஸ்டல் வார்டன் அளித்துள்ளதாகவும் அதிகாரி தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட ஹாஸ்டல் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்ததாகவும் அதன் குத்தகை காலாவதி ஆகிவிட்டதை அடுத்து, இடத்தை காலி செய்ய வேண்டும் என்று உரிமையாளர் வற்புறுத்தியதாகவும் இடமாற்றம் செய்யப்பட்ட ஆத்திரத்தில் ஹாஸ்டல் வார்டன் கோபமடைந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாகவும் அதிகாரி தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
மேலும் ஹாஸ்டல் வார்டன் அங்கு தங்கியிருந்த மாணவிகளுக்கு மூன்று நாட்கள் உணவு மற்றும் தண்ணீர் கொடுக்காமல் கொடுமைப்படுத்தியது சோதனையில் தெரியவந்துள்ளதாகவும் அதன் பிறகு அங்குள்ள மாணவிகளுக்கு அதிகாரிகள் சார்பில் உணவு அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதிகாரி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் போலீசார் இது குறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.