தமிழகத்தில் 45 நாட்களில் மருத்துவமனை....! "டீமேஜ்" நிறுவனம் உலக சாதனை படைத்தது எப்படி...?
Send us your feedback to audioarticles@vaarta.com
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வெறும் 45 நாட்களில் மருத்துவமனையை உருவாக்கியுள்ளது தி சென்னை சில்க்ஸ் குழுமத்தின் டீமேஜ் நிறுவனம்.
கடந்த 2007-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட (TEEMAGE) பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், சுமார் 16,076 நபர்கள் ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிறுவனம் 'தி சென்னை சில்க்ஸ்' குழுமத்தின் ஓர் அங்கமாகும். சென்ற 14 ஆண்டுகளில் உலகத் தரம் வாய்ந்த கட்டுமானப்பணிகளை இந்தியா முழுவதும் உருவாக்கியுள்ளது இந்நிறுவனம். PRECAST என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் நம் நாட்டில் முதன்மை பெற்று விளங்குகிறது டீமேஜ். இத்துணை வருடங்கள் உழைத்ததின் பலனாக இந்நிறுவனம் உலக சாதனையை படைத்துள்ளது.
உலக சாதனை :
அதாவது வெறும் 45 நாட்களில் 69,200.0056 சதுர அடி கொண்ட, இரண்டு அடுக்குமாடியுள்ள மருத்துவமனையை உருவாக்கியுள்ளது டீமேஜ். PRECAST தொழில்நுட்பத்த்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த கட்டிடமானது, 18-05-2021 அன்று காலை துவங்கப்பட்டு 10-07-2021-ம் தேதியில் மாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகக்குறைவான கால இடைவெளியில், ப்ரீகாஸ்ட் கான்கீரிட் தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ள மிகப்பெரிய மருத்துவமனை என்ற பெருமையையும், உலக சாதனையையும் இந்நிறுவனம் படைத்துள்ளது.
இந்த சாதனையை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் கெ்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட 4 உலக சாதனை நிறுவனங்கள், "உலக சாதனையாக" அங்கீகாரம் கொடுத்துள்ளது.
தமிழக அரசிற்கு மருத்துவமனையை நன்கொடை அளிக்கும் நோக்கில், ரோட்டரி ஹெல்த்கேர் டிரஸ்ட் முன்வந்து எடுக்கப்பட்ட முயற்சி தான் இது. இந்த டிரஸ்ட் கூறியபடியே டீமேஜ் நிறுவனம் மருத்துவமனையை கட்டித்தந்து ஒப்படைத்துள்ளது. கூடிய விரைவில் ரோட்டரி ஹெல்ஹேர் டிரஸ்ட், ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments