கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர் மரணம்: விடுமுறை அளிக்கவில்லை என புகார்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர் ஒருவருக்கு விடுமுறை அளிக்காததால் அவர் பரிதாபமாக மரணம் அடைந்ததால் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மகாராஷ்டிர மாநிலத்தில் குறிப்பாக அதன் தலைநகர் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. மும்பையில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி உள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர்கள் நர்சுகள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,

இந்த நிலையில் மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர் ஒருவருக்கு விடுமுறை அளிக்காமல் மருத்துவமனை நிர்வாகம் அவரை தொடர்ந்து பணியில் இருக்கும்படி வற்புறுத்தியதாகவும், அவருக்கு கொரோனா சோதனை கூட செய்யப்படவில்லை என்றும் அதனால் அவர் பரிதாபமாக மரணம் அடைந்துவிட்டதாகவும் மரணம் அடைந்தவரின் சக ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் போராட்டம் நடத்தி வருவதாகவும் தெரிகிறது

கடந்த 20ஆம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர் 24ஆம் தேதி வரை பணி செய்ததாகவும், அதன் பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி மரணமடைந்து விட்டதாகவும் சக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்று தெரிந்தும் அவரை கட்டாயப்படுத்தி பணி செய்ய வைத்த மருத்துவ நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சக ஊழியர்கள் கூறியுள்ளனர்

More News

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து சோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்த WHO!!! நடப்பது என்ன???

கொரோனா சிகிச்சைக்கு இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட எந்த மருந்தையும் உலகச் சுகாதார அமைப்பு பரிந்துரைக்க வில்லை.

கொரோனா விஷயத்தில் உலக நாடுகள் மெத்தனம் காட்டினால் “அது இரண்டாவது உச்சத்தைக் காட்டிவிடும்” – WHO எச்சரிக்கை!!!

கொரோனா பரவல் எண்ணிக்கை உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கிறது

மகன் தாலி கட்டிய சில நிமிடங்களில் தந்தை மரணம்: கொரோனா தந்த அதிர்ச்சி

நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகன் தாலி கட்டிய அடுத்த சில நிமிடங்களில் அவருடைய தந்தை திடீரென மரணம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? பரபரப்பு தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக நான்காம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் இருந்துவரும் நிலையில் வரும் 31-ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவடைகிறது

போனிகபூரை அடுத்து மேலும் ஒரு தயாரிப்பாளர் வீட்டில் புகுந்த கொரோனா!

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' என்ற தமிழ் படம் மற்றும் பல பாலிவுட் திரைப்படங்களை தயாரித்தவர் போனிகபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான இவருடைய வீட்டில் பணிபுரிந்த