அமைச்சர் கே.பி.அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் பாமர மக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சமீபத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அமைச்சர் கேபி அன்பழகன் அவர்களின் உடல்நிலை குறித்து சென்னை மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் கோவிட்-19 இலிருந்து நன்றாக குணமடைந்து வருகிறார். அவர் தனி அறையில் உள்ளார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. அவர் கூடிய விரைவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அந்த மருத்துவமனை இயக்குனர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தங்க மாஸ்க்கை அடுத்து வைரலாகும் வைர மாஸ்க்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார மையம் முதல் மாநில சுகாதார அமைச்சகம் வரை மக்களுக்கு அறிவுறுத்தி

ரஜினியை சந்தித்த அந்த மறக்க முடியாத தருணம்: பிரபல இயக்குனரின் மலரும் நினைவுகள்

நடிகரும் இயக்குனருமான சேரன் அவ்வப்போது தனது மலரும் நினைவுகள் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

விஜய் மில்டனின் அடுத்த படம் குறித்து சூர்யா தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகிய விஜய் மில்டன், கடந்த 2014ஆம் ஆண்டு 'கோலி சோடா' என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி: எப்பதா பயன்பாட்டுக்கு வரும்??? நாடாளுமன்றத்தின் புது அப்டேட்!!!

வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய விஞ்ஞானிகள் தயாரித்த கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு வரும்

ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகி திடீர் நீக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் நிலையில் அவர் தற்போது 'ரஜினி மக்கள் மன்றம்' என்ற அமைப்பை தொடங்கி அதற்கு மாநிலம் முழுவதும்