கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனையின் லேட்டஸ்ட் அறிக்கை!

  • IndiaGlitz, [Wednesday,November 24 2021]

உலக நாயகன் கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்று வந்தார் என்பதும் அதன் பின் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் அறிவித்து இருந்தது.

இதனை அடுத்து கமல்ஹாசன் அவர்கள் விரைவில் குணமாக வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் மீண்டும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கமல்ஹாசன் அவர்கள் தற்போது கொரோனா சிகிச்சையில் உள்ளார் என்றும் அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கமல்ஹாசன் விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.