கமல்ஹாசனின் உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். சமீபத்தில் கமலஹாசன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த நிலையில் அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பிய உடன் தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘கமல்ஹாசன் அவர்கள் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுவாச குறைவு மற்றும் தொற்று காய்ச்சல் ஆகியவை உள்ளது. அது மட்டுமின்றி அவருக்கு கொரோனா வைரஸ் பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவருக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை தேறி நலமுடன் இருக்கிறார்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com