நடிகர் சங்கத்தின் கோரிக்கைக்கு கேரள அரசின் முதல்வர் அலுவலகம் பதில்

  • IndiaGlitz, [Tuesday,February 21 2017]

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் சில மர்ம நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் கேரள திரையுலகை மட்டுமின்றி கோலிவுட் திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாவனாவை துன்புறுத்திய நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் கேரள முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டதாக நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால் தெரிவித்திருந்ததை ஏற்கனவே பார்த்தோம்

இந்நிலையில் நடிகர் சங்கத்தின் கடிதத்திற்கு கேரள அரசின் முதல்வர் அலுவலகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. உங்களது புகார் பதிவு செய்யப்பட்டதாகவும், இதுகுறித்த சரியான நடவடிக்கை எடுக்க உங்கள் கடிதம் கூடுதல் தலைமை செயலாளர், உள்துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு, மாநில காவல்துறை தலைமை அதிகாரி ஆகியோர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த புகாருக்கு உடனடி நடவடிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

ரஜினி-ரஞ்சித் படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் சாதனை வசூல் புரிந்த நிலையில் இந்த சூப்பர் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது என்பது ஏற்கனவே அறிந்ததே. தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது...

முதுகெலும்பு இல்லாதவர் என்று கூறிய சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவர்களுக்கும் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தின் மூலம் சொற்போர் நடந்து வருவதை அனைவரும் கவனித்து கொண்டுதான் வருகின்றனர்...

ஜோதிகா கேரக்டரை ஏற்கும் அருள்நிதி

'மொழி', 'அபியும் நானும்' உள்பட பல தரமான படங்களை இயக்கிய இயக்குனர் ராதாமோகன் இயக்கவுள்ள அடுத்த படமான 'பிருந்தாவனம்' படத்தில் அருள்நிதி நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் அருள்நிதி காதுகேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி கேரக்டரில் அவர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்

வெளிமாநிலங்களில் இருந்து எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. சி.ஆர்.சரஸ்வதி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது.

கமலுடன் இணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தனது சமூக வலைத்தளத்தில் தற்கால சமூக, அரசியல் நடவடிக்கைகளை விமர்சித்து வருகிறார்