வைக்கம் விஜயலட்சுமிக்கு அமெரிக்க பல்கலை தந்த கெளரவம்

  • IndiaGlitz, [Friday,July 07 2017]

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி தனது இனிமையான குரலின் மூலம் தமிழ், மலையாள திரைப்படங்களில் பல படங்களில் பாடியுள்ளார். குக்கூ, பட்டதாரி', 'என்னமோ ஏதோ, வெள்ளைக்காரத் துரை, ரோமியோ ஜூலியட், வீர சிவாஜி, தெறி, உள்பட பல திரைப்படங்களில் பாடிய வைக்கம் விஜயலட்சுமி, எஸ்.எஸ்.ராஜமெளலியின் பாகுபலி' படத்தில் இடம்பெற்ற யாரு இவன் யாரு இவன்' என்ற பாடலையும் மிக அற்புதமாக பாடியிருந்தார்.
வைக்கம் விஜயலட்சுமியின் இசையுலக சாதனையை பாராட்டி இவரை கெளரவிக்கும் விதமாக அமெரிக்காவை சேர்ந்த உலக தமிழ் பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ டாக்டர் வழங்கியுள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் இந்த பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. டாக்டர் பட்டம் பெற்ற விஜயலட்சுமிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் வைக்கம் விஜயலட்சுமி அவர்களுக்கு பிரிட்டனில் உள்ள வேர்ல்ட் ரிக்கார்ட் யூனிவர்சிட்டி (WRU University) கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திரையுலகிற்கு சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கேட்டுள்ள 5 கேள்விகள்

ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி ஆகியவற்றை எதிர்த்து உண்மையில் மக்கள் தான் போராட வேண்டும். எந்த வரி போட்டாலும் அதை கட்டபோவது மக்கள் தான்.

வேலைக்கு சேர்ந்த மூன்றே மாதத்தில் தூக்கில் தொங்கிய பெண் ஐடி ஊழியர்

கடந்த சில மாதங்களாகவே ஐடி ஊழியர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்று மைசூரில் ஒரு பெண் ஊழியர் தான் தங்கியிருந்த அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மென்மொருள் மூலம் போலி ஏடிஎம் கார்டு. லட்சக்கணக்கில் கொள்ளையடித்த சென்னை வாலிபர் கைது

இன்றைய டெக்னாலஜி உலகில், எந்த பொருளை வாங்கினாலும் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் ஸ்வைப் செய்வது சர்வசாதாரணமாகி வருகிறது.

வேலைநிறுத்தம் வாபஸ் எதிரொலி: தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய அறிக்கை

மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரி ஆகிய இரட்டை வரிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த திங்கள் முதல் திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்த நிலையில் நேற்று இதுகுறித்து தமிழக அரசுடன் திரையுலக பிரபலங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதையும், இதில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக வேலைநிறுத்தம் தற்காலிகமாக வ

வேகத்தைடையை கவனிக்காக ஓட்டுனரின் அலட்சியத்தால் பெண் பயணி பலி

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே வேகத்தடையை கவனிக்காமல் மிக வேகமாக வேகத்தடை மீது பேருந்து ஏறி இறங்கியதால் பேருந்தில் இருந்த பயணிகள் தூக்கி அடிக்கப்பட்டனர்.