மனிதர்களிடம் இருந்து நாய்களுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ்..! இப்படி நடப்பது இதுதான் முதல் முறை.
- IndiaGlitz, [Thursday,March 05 2020]
ஹாங்காங்கில் மனிதர்களிடமிருந்து அவர்கள் வளர்க்கும் நாய்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் முதன் முதலாக மனிதலிருந்து விலங்குகளுக்கு பரவிய வைரஸாகும்.
சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையை அச்சுறுத்தி வருகிறது. இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் மட்டும் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான், இத்தாலி என பல நாடுகள் இந்த கொரோனா வைரஸானது பரவளில் சிக்கித்தவித்து வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியாவும் வரிசையில் இணைந்தது.
இந்நிலையில் ஹாங்காங்கில் வளர்ப்பு பிராணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா என் சோதித்து பார்த்து விலங்குகளுக்கான சுகாதார மையம் மற்றும் ஹாங்காங் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் கலந்து ஆலோசித்து நாய்க்கு கொரோனா தொற்று குறைந்தளவு இருப்பதை கண்டறிந்து அறிவித்துள்ளனர்.
சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் நாயின் மூக்கு மற்றும் வாயின் வழியாக வைரஸானது உள்ளே சென்றிருக்கலாம் என மருத்துவர்கள் ஊகிக்கின்றனர். நாயினை தனிமையில் தீவிர கண்காணிப்பில் வைக்க முடிவு செய்துள்ளனர்.