உண்மைய சொல்லனும்னா விஜய் தோற்றம் யாருக்குமே பிடிக்கல- வலைப்பேச்சு அந்தணன்.
Send us your feedback to audioarticles@vaarta.com
Goat திரைப்படத்தை சார்ந்து சமீபத்தில் வலைப்பேச்சு அந்தணன் இந்தியா க்ளிட்ஸ் யூடுயுப் சேனலில் பேசிய தகவலை பற்றி காண்போம்.
Goat திரைப்படத்தை பொறுத்தவரை அரசல் புரசலா நிறையவே விமர்சனங்கள் வருது.ஆனால் உண்மையில் படத்தில் விஜய் தோற்றம் நன்றாக இல்லை என்பதை நாம் ஒத்துக்கிட்டே ஆக வேண்டும்.
அதே போல் அந்த பாட்டில் வரும் நடனத்திற்காக அவர் அப்படி ஒரு முகபாவனையை வைத்துள்ளார் மொத்தமாக படம் முழுவதும் அப்படி இருக்குமா என்றால் தெரியவில்லை .
மேலும் இந்த மாதிரியான மோசமான விமர்சனங்கள் வருவதை நாம் நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.ஏனென்றால் மக்கள் பெரிய எதிர்ப்பார்ப்போடு திரையரங்கம் வந்து ஏமாந்து சென்றால் அது இன்னும் சில எதிர்மறை தாக்கத்தை தரும்.இதை இப்படியே விடுவது நல்லது
இந்த படத்தை முழுவதும் பார்த்த கல்பாத்தி அகோரம் சகோதரர்கள் மற்றும் விஜய் எங்களுக்கு பிடித்து இருக்கிறது என்று சொல்லி விட்டார்கள்.மற்றபடி மக்கள் அதிக எதிர்பார்ப்பு வைக்காமல் படத்தை பார்த்து பிறகு முடிவு செய்யலாம்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை பொறுத்தவரை இந்த படத்தில் நல்லா பண்றேன் கவனமா பண்றேன்னு சொல்லி சொதப்பி வெச்சிட்டாரு.அதே போல் செப்டம்பர் 5 படம் வெளியாகிறது மேலும் விஜய் வெற்றி கழகம் மாநாடு 25 .படத்தின் வெற்றிக்கும் இந்த மாநாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மேலும் ஒரு படம் வெற்றி தோல்வி அடைவது ஒரு பக்கம்.ஒரு நடிகரின் வெற்றிப்பயணம் மற்றும் செல்வாக்கு என்பது மொத்தமாக வேறு.நாம் இதை இரண்டையும் பிரித்து பார்க்க தெரிஞ்சிக்கணும்.
வலைப்பேச்சு அனந்தன் பேசிய தகவலை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com
Comments