60 வயதில் திருமண நாடகம் போட்ட ஆசாமி… 14 திருமணங்களைச் செய்து மோசடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹோமியோபதி டாக்டர் ஒருவர் திருமணத் தகவல் தரும் ஆன்லைன் வெப்சைட்டுகள் மூலம் தகவல்களைச் சேகரித்து இதுவரை 14 திருமணங்களைச் செய்துகொண்டிருக்கிறார். மேலும் இவரை திருமணம் செய்து கொண்டவர்களில் துணை இராணுவத்தில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரியும் இருப்பது பலரை மலைக்க வைத்துள்ளது.
ஒடிசாவின் கேந்திரபாரா எனும் பகுதியைச் சேர்ந்தவர் காமேஷ் சந்திரா ஸ்வைன். இவருக்கு முறைப்படி கடந்த 1982 இல் திருமணம் நடந்துள்ளது. பின்னர் அதே மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை கடந்த 2002 இல் திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் தனியார் மருத்துவராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த இரு திருமணங்கள் மூலம் காமேஷ்க்கு 5 குழந்தைகள் உள்ளனர் என்றும் அதில் முதல் இரு மகன்கள் மருத்துவர்களாக உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையல் காமேஷ் ஆன்லைன் திருமண சேவை மையங்களைப் பயன்படுத்தி கடந்த 2002 முதல் 2020 வரை பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டுள்ளார். இவருடைய திருமணத் தேர்வுகளில் பெரும்பாலும் தனியாக இருக்கும் பெண்கள், விதவைகள், நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
மேலும் இப்படி ஏமாற்றி திருமணம் செய்துகொள்ளும் காமேஷ் அவர்களுடன் சிறிது காலம் வாழ்ந்துவிட்டு அவர்களிடம் இருக்கும் நகை, பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கைவிட்டு விடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 7 மாநிலங்களில் இதுவரை 14 திருமணங்களை செய்துள்ளதாக கூறப்படும் காமேஷ்ஷின் பட்டியலில் துணை இராணுவத் துறையில் பணியாற்றிவரும் ஒரு பெண் அதிகாரியும் ஏமாந்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் காமேஷ் சமீபத்தில் டெல்லியில் இருந்து ஒரு பெண் ஆசிரியரை திருமணம் செய்துகொண்டு வந்துள்ளார். அவர் காமேஷ்ஷின் அனைத்து மோசடிகளையும் கண்டுபிடித்து தற்போது காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில் 60 வயது மோசடிக்காரர் காமேஷ் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்கு கொண்டுவரப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout