60 வயதில் திருமண நாடகம் போட்ட ஆசாமி… 14 திருமணங்களைச் செய்து மோசடி!

  • IndiaGlitz, [Wednesday,February 16 2022]

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹோமியோபதி டாக்டர் ஒருவர் திருமணத் தகவல் தரும் ஆன்லைன் வெப்சைட்டுகள் மூலம் தகவல்களைச் சேகரித்து இதுவரை 14 திருமணங்களைச் செய்துகொண்டிருக்கிறார். மேலும் இவரை திருமணம் செய்து கொண்டவர்களில் துணை இராணுவத்தில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரியும் இருப்பது பலரை மலைக்க வைத்துள்ளது.

ஒடிசாவின் கேந்திரபாரா எனும் பகுதியைச் சேர்ந்தவர் காமேஷ் சந்திரா ஸ்வைன். இவருக்கு முறைப்படி கடந்த 1982 இல் திருமணம் நடந்துள்ளது. பின்னர் அதே மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை கடந்த 2002 இல் திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் தனியார் மருத்துவராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த இரு திருமணங்கள் மூலம் காமேஷ்க்கு 5 குழந்தைகள் உள்ளனர் என்றும் அதில் முதல் இரு மகன்கள் மருத்துவர்களாக உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையல் காமேஷ் ஆன்லைன் திருமண சேவை மையங்களைப் பயன்படுத்தி கடந்த 2002 முதல் 2020 வரை பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டுள்ளார். இவருடைய திருமணத் தேர்வுகளில் பெரும்பாலும் தனியாக இருக்கும் பெண்கள், விதவைகள், நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இப்படி ஏமாற்றி திருமணம் செய்துகொள்ளும் காமேஷ் அவர்களுடன் சிறிது காலம் வாழ்ந்துவிட்டு அவர்களிடம் இருக்கும் நகை, பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கைவிட்டு விடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 7 மாநிலங்களில் இதுவரை 14 திருமணங்களை செய்துள்ளதாக கூறப்படும் காமேஷ்ஷின் பட்டியலில் துணை இராணுவத் துறையில் பணியாற்றிவரும் ஒரு பெண் அதிகாரியும் ஏமாந்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் காமேஷ் சமீபத்தில் டெல்லியில் இருந்து ஒரு பெண் ஆசிரியரை திருமணம் செய்துகொண்டு வந்துள்ளார். அவர் காமேஷ்ஷின் அனைத்து மோசடிகளையும் கண்டுபிடித்து தற்போது காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில் 60 வயது மோசடிக்காரர் காமேஷ் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்கு கொண்டுவரப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

வொர்க் ஃபரம் ஹோம் கொடுத்த வரம்… 6 இடத்தில் வேலைப்பார்த்து கோடீஸ்வரனாகும் இளைஞர்!

ஐரோப்பியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா நேரத்தில் வொர்க் ஃபரம் ஹோமில் வேலைப்பார்த்து வந்துள்ளார்

பிரியறதுக்கு ஆயிரம் வழி இருக்கு, ஆனா சேர்ந்து வாழ ஒரே காரணம் காதல்: 'ஹே சினாமிகா' டிரைலர்

துல்கர் சல்மான், காஜல் அகர்வால் நடிப்பில் உருவான 'ஹே சினாமிகா'படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது விரைவில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி

பீப் பாடல் விவகாரம்: சிம்பு மீதான வழக்கில் அதிரடி உத்தரவு!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்புவின் பீப் பாடல் குறித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது

சிகிச்சை பெற்று வரும் மூதாட்டிக்கு மருந்தாக உதவிய 'அரபிக்குத்து' பாடல்” வைரல் வீடியோ!

 விஜய் படத்தின் பாடல் என்றால் உறுதியாக ஹிட்டாகி விடும் என்பதும் 6 முதல் 60 வயது வரை உள்ள அனைவருக்கும் பிடித்த பாடலாக அது மாறிவிடும் மேஜிக் என்பதையும் கடந்த சில ஆண்டுகளாக

ராஷ்மிகா மந்தனாவுக்கு திருமணமா? அவரே அளித்த விளக்கம்!

பிரபல தெலுங்கு நடிகருடன் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு திருமணம் என வதந்திகள் பரவி வரும் நிலையில் தனது திருமணம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ராஷ்மிகா மந்தனா விளக்கமளித்தார்.