close
Choose your channels

ஒரு சின்ன உதவியால் நடந்த பெரும் டிவிஸ்ட்… நெகிழ்ச்சி சம்பவம்!!!

Tuesday, December 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு சின்ன உதவியால் நடந்த பெரும் டிவிஸ்ட்… நெகிழ்ச்சி சம்பவம்!!!

 

பிரேசில் நாட்டில் பிச்சைக்காரனுக்கு முடித்திருத்தம் செய்ததால் அதுவே இறுதியில் பெரும் டிவிஸ்டாக மாறி இருக்கிறது. இதனால் அந்தப் பிச்சைக்காரரை அடையாளம் கண்ட அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அழைத்துச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உணவுக்காக பிரேசில் நாட்டின் தெருக்களில் குப்பையை பொறுக்கிக்கொண்டு காடு போன்ற முடியை வளர்த்து இருக்கிறார் ஒரு பிச்சைக்காரர். அவரைப் பார்த்த அலெக்சாண்ட்ரா லோபோ எனும் நபர் சாப்பாடு வேண்டுமா என அன்போடு கேட்டு இருக்கிறார். ஆனால் கூச்ச சுபாவம் கொண்ட அந்தப் பிச்சைக்காரர் வேண்டாம் எனத் தலையை ஆடடி இருக்கிறார். பிச்சைக்காரரின் சாதுவான குணத்தைப் பார்த்த லோபா இவருக்கு முடியை வெட்டிவிட்டால் என்ன? என்று முடி செய்து இருக்கிறார். காரணம் லோபா ஆண்கள் பேஷன் அழகு நிலையத்தை நடத்தி வருகிறார்.

இதனால் அந்தப் பிச்சைக்காரரை தன்னுடைய கடைக்கு அழைத்து சென்று முடியை நன்றாக அழகுப்படுத்தி அவருக்கு சில ஆடைகளையும் கொடுத்து இருக்கிறார். மேலும் அவரை அழகுபடுத்தி சில போட்டோக்களையும் எடுத்து இருக்கிறார். அதோடு பிச்சைக்காரரின் பழைய உருவம் தற்போதைய உருவம் என இரண்டையும் இணையத்து இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். ஒரு பிச்சைக்காரரை அழகுப்படுத்த வேண்டும் என நினைத்த லோபோவின் நற்செயலைப் பாராட்டி இணையத்தில் பலரும் பராட்டுகளைத் தெரிவித்து இருந்தனர்.

இந்த வைரல் காட்சிகளை பிச்சைக்காரரின் குடும்ப உறுப்பினர்களும் சமூக வலைத்தளத்தில் பார்த்து இருக்கின்றனர். இதனால் தன்னுடைய உறவினரை அடையாளம் கண்டு கொண்டதோடு லோபோவை தொடர்பு கொண்டு 10 வருடத்திற்கு காணாமல் போன தனது அழைத்தும் சென்று இருக்கின்றனர். இதனால் ஒரு முடித்திருத்தம் ஒருவரின் வாழ்வில் இவ்வளவு மாற்றத்தைக் கொண்டு வருமா என லோபோ படு சந்தோஷத்தில் துள்ளி குதித்து தனது மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment