மழைகாலத்தில் சளி, தொண்டை வலியா? நோய்த்தீர்க்கும் வழிமுறை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பருவமழை காலம் என்றாலே தொற்றுநோய்களுக்கு பஞ்சமே இருக்காது. இதற்கிடையில் சளி, தொண்டையில் வலி, கீறல், எரிச்சல் போன்ற பிரச்சனைகளும் நம்மை வாட்டி வதைக்கின்றன. இதுபோன்ற நோய்த் தொல்லைகளுக்கு கை மருத்துவத்தையே பலரும் விரும்புகிறோம்.
அந்த வகையில் தொண்டையில் கடுமையான வலி அல்லது ஊசிக் குத்துவது போன்ற வலி இருந்தால் அது பாக்டீரியா மற்றும் வைரஸ் பாதிப்புகளினால் ஏற்பட்டதாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
sore throat எனப்படும் இதுபோன்ற பாதிப்புகள் பெரும்பாலும் A Streptococcus எனும் கிருமிகளால் ஏற்படுகிறது என்றும் இது பெரிய நோய்த்தொற்றுக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே தொண்டை வலியை சாதாரணமாக கடந்துவிடாமல் அந்த நோயை முறிப்பதற்கான வழிமுறையை கையாள்வது நல்லது.
மஞ்சள்-மழைகாலங்களில் ஏற்படும் தொண்டை பிரச்சனைகளுக்கு மஞ்சள் ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. மேலும் சிறந்த ஆக்சிஜனேற்றி என்பதால் சிறிதளவு சூடு நிரீல் மஞ்சளை சேர்த்து கொப்பளிக்கலாம். இது நோய்த்தொற்று மற்றும் காயங்களை தொண்டையில் இருந்த உடனடியாக அகற்றிவிடும்.
தேன்- பாக்டீரியாக்களினால் ஏற்படும் நோய்த்தொற்றுகளை முறிப்பதில் தேனுக்கு சிறந்த சக்தி உண்டு. அந்த வகையில் எலுமிச்சை கலந்த வெந்நீரில் சிறிதளவு தேனை கலந்து குடிக்கும்போது நோய்த்தொற்று காணாமல் போகும்.
ஆப்பிள் வினிகர்- ஆப்பிள் சாற்றில் செய்யப்படும் வினிகர் அமிலத்தன்மையுடன் இருக்கும். இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் நோய்த்தொற்றை போக்குவதற்கும் அதேபோல குளிர்காலத்தில் தொண்டையில் ஏற்படும் உறுத்தல்களுக்கு சிறந்த மருந்தாகவும் இருக்கிறது.
பூண்டு – பூண்டு ஆன்டிபயாடிக்காக இருப்பதால் தொண்டை வலிக்கும் நோய்த்தொற்றுக்கும் சிறந்த நிவாரணியாக கருதப்படுகிறது. மேலும் பூஞ்சை தொற்றுகளால் ஏற்படும் நோய்களுக்கு ஆண்டி வைரஸாக பூண்டு இருக்கிறது. எனவே சுடு தண்ணீரில் பூண்டை சேர்த்து அருந்தலாம்.
உப்பு நீர்- குளிர்காலத்தில் ஏற்படும் பெரும்பாலான தொற்றுநோய்களைத் தடுப்பதற்கு சிறிதளவு சூடு நீரில் உப்பை கலந்து வாய் கொப்பளித்தல் மற்றும் காகுள் செய்தலை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
தேநீர்- துளசி, தூதுவளை, சுக்கு, மிளகு, திப்பிலி, தேயிலை போன்றவற்றைச் சேர்ந்து தேநீர் அருந்தினால் தொண்டைக்கு இதமாக இருக்கும். நோய் நிவாரணியாகவும் இருக்கும்.
கடுகு- கடுயைமான தொண்டை வலியை உணரும்போது கடுகை பொடித்து தூளாக்கி தொண்டை மீது தடவலாம். தொண்டை வலியை இது கணிசமாக குறைத்துவிடும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments