வீடு இல்லாத ஆதிதிராவிடர், அருந்ததியர் மக்களுக்கு கான்க்ரீட் வீடுகள்… முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

வரும் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் அதிரடி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் ஒவ்வொரு இடத்திலும் மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவிச் சாய்த்து அதை நிறைவேற்றி வருகிறார். மேலும் சில அதிரடியான திட்டங்களையும் அவ்வபோது செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக விவசாயிகளின் கூட்டுறவு கடனை அதிரடியாக தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டார். அதோடு நிவர் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கான இடுபொருள் நிவாரணத் தொகையையும் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். மேலும் விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். இப்படி தமிழக முதல்வர் தொடர்ந்து அதிரடியான செயல் திட்டங்களை அமல்படுத்தி வரும் நிலையில் மேலும் ஒரு அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

தற்போது திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கிராமம் முதல் நகரம் வரை தமிழகத்தில் உள்ள வீடு இல்லாத அனைத்து அருந்ததியர் மற்றும் அதிதிராவிட மக்களுக்கு அரசு சார்பாக நிலத்தை வாங்கி, கான்கிரீட் வீடு கட்டி தரப்படும் என அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிவிப்பை ஒட்டி அனைத்துத் தரப்பு மக்களும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.