தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹாலிவுட் படக்குழுவினர்!

  • IndiaGlitz, [Wednesday,April 27 2022]

தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான ’தி க்ரே மேன்’ என்ற படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் நேற்று இந்த படத்தில் நான்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இருந்தன என்பதும் அதில் தனுஷ் புகைப்படம் இல்லாததால் தனுஷ் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் தனுஷ் ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் தற்போது ’தி க்ரே மேன்’ படக்குழுவினர் தனுஷின் மாஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். கார் மீது ஸ்டைலாக இருக்கும் தனுஷின் இந்த புகைப்படம் அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

’தி க்ரே மேன்’ படம் ஜூலை 22 ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் தனுஷ் நடித்து முடித்துள்ள ‘நானே வருவேன்’, ’திருச்சிற்றம்பலம்’ மற்றும் நடித்து கொண்டிருக்கும் ‘வாத்தி’ ஆகிய படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ளதால் தனுஷ் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.