close
Choose your channels

சூர்யாவின் அடுத்த படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்கள்.. 600 கோடி பட்ஜெட்டா?

Wednesday, May 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா ’கர்ணா’ என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் நடிக்க உள்ள நிலையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்கள் இணைய இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா ’கங்குவா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 44’ படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் ஜூன் முதல் வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 40 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் சூர்யா ’கர்ணா’ என்ற பாலிவுட் படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாகவும் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படத்தில் நாயகியாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் என்பவர் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நிக் பவல் என்ற ஸ்டண்ட் இயக்குனர்கள் இணைய போவதாகவும் ஹாலிவுட்டில் ’பிரேவ் ஹார்ட்’ ’கிளாடியேட்டர்’ உட்பட பல படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த இவர்கள் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தில் பணி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘கர்ணா’ படத்தில் இவர்கள் இணையவிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஏராளமான வாள் சண்டை காட்சிகள் இருப்பதாகவும் அதுமட்டுமின்றி இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் ஸ்டண்ட் காட்சிகள் பிரமாண்டமாக உருவாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ’கங்குவா’ திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் ’கர்ணா’ திரைப்படமும் பிரமாண்டமாக உருவாக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றால் சூர்யா, பான் இந்திய ஸ்டார் ஆக மாறி விடுவார் என்றும் அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment