சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தில் ஹாலிவுட் பிரபலம்.. வேற லெவலில் ஆக்சன் காட்சிகள்?

  • IndiaGlitz, [Thursday,November 17 2022]

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘மாவீரன்’ திரைப்படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் இணைந்து உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் வேற லெவல் ஸ்டண்ட் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மாவீரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் யான்னிக் பென் என்பவர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’, விக்ரமின் ‘துருவநட்சத்திரம்’ சமந்தாவின் ‘யசோதா’ போன்ற படங்களில் யான்னிக் பென் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இதனை அடுத்து ‘மாவீரன்’ படத்தில் வேற லெவல் ஸ்டன்ட் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதிஷங்கர் நடித்து வரும் இந்த படத்தில் மிஸ்கின் மற்றும் ’புஷ்பா’ சுனில் ஆகிய இருவரும் வேற லெவல் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி நடிகை சரிதா ஒரு அட்டகாசமான குணச்சித்திர கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' : சூப்பர் அப்டேட்டை அறிவித்த சன் பிக்சர்ஸ்

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.

கெளதம் கார்த்திக்-மஞ்சிமா திருமண அழைப்பிதழ் இதுதான்: என்ன ஸ்பெஷல் தெரியுமா?

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளதாக வெளியான

விஜய்யின் 'தளபதி 67' படத்தில் கமல்ஹாசனா? லோகேஷின் வேற லெவல் பிளான்!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 67' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

தனுஷின் 'வாத்தி' ரிலீஸ்  தேதி அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்

தனுஷ் நடித்த 'வாத்தி' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும்

ஜீ5 ஒரிஜினல்ஸ் “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்”  இணையத் தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் ஓடிடி உலகில்  புதுமையான படைப்புகள் மூலம் அனைவரையும் கவர்ந்து வரும் ஜீ5 தளத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்”  இணையத் தொடர்.