அஜித்தின் 'வலிமை' படத்தில் இணையும் ஹாலிவுட் கலைஞர்: பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Thursday,October 01 2020]

தல அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வலிமை’. இண்டர்போல் அதிகாரி கேரக்டரில் நடித்து வரும் அஜீத்துக்கு ஜோடியாக ஹூமோ குரேஷி மற்றும் வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து வருகின்றனர்

இந்த படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் கடந்த வாரம் இயக்குனர் ஹெச். வினோத் இந்த படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார் என்பதும் சென்னை புறநகர் பகுதியில் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்து வருவதாகவும் அவரது ஸ்டண்ட் இயக்கத்தில் முக்கிய அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

யுவன் சங்கர் ராஜா இசையில், நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் இந்த படம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதும், அஜித் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது