'ஜோக்கர் 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு: ஹாலிவுட் ரசிகர்கள் குஷி

  • IndiaGlitz, [Thursday,August 04 2022]

ஹாலிவுட் திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று ’ஜோக்கர்’ என்பதும் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் 70 மில்லியன் பட்ஜெட்டில் தயாராகி ஒரு பில்லியனுக்கும் அதிகமான வசூலை குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

’ஜோக்கர் 2’ படக்குழுவினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி ’ஜோக்கர் 2’ திரைப்படம் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஜோக்கர் படத்தை ரசித்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் இன்னும் இரண்டு வருடங்களுக்கும் மேல் இந்த படத்திற்காக காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது

முதல் பாகத்தில் நடித்த Joaquin Phoenix உள்பட பெரும்பாலானோர் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். மேலும் முதல் பாகத்தில் நடித்த நாயகன் Joaquin Phoenix சம்பளமாக $4.5 மில்லியன் பெற்ற நிலையில் அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் இரண்டாம் பாகத்திற்கு $20 மில்லியன் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

More News

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்!

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும்  'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் இணைந்த நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு கடந்த இரண்டு நாட்களாக

சந்தானத்திற்கு தோளுக்கு மேல் வளர்ந்த இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படம்!

சமீபத்தில் நடிகர் சந்தானம் தனது மகனுடன் கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவரது மகன் சந்தானத்தின் தோளுக்கு மேல் வளர்ந்து உள்ள நிலையில்

விவாகரத்து ஆனாலும் முன்னாள் மனைவிகளை வாரம் வாரம் பார்ப்பேன்: பிரபல நடிகர் பேட்டி

பிரபல நடிகர் ஒருவர் தான் விவாகரத்து செய்த இரண்டு மனைவிகளை ஒவ்வொரு வாரமும் சென்று பார்ப்பேன் என்று கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நாளை ரிலீஸாகவுள்ள முன்னணி நடிகரின் திரைப்படத்திற்கு திடீர் தடை: ரசிகர்கள் அதிர்ச்சி!

நாளை வெளியாக உள்ள முன்னணி நடிகரின் படத்திற்கு திடீரென தடை விதிக்கப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோபத்தை கட்டுப்படுத்த சன்னிலியோன் செய்த செயல்: வைரல் வீடியோ

கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக நடிகை சன்னிலியோன் செய்த செயல் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.