close
Choose your channels

ஹாலிவுட்டின் 'ஜோக்கர் 2': சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட வார்னர் பிரதர்ஸ்..!

Wednesday, April 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2019 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ’ஜோக்கர்’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்தியாவில் கூட தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியாகி பெரும் வசூலை குவித்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ’ஜோக்கர்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய அறிவிப்பை வார்னர் பிரதர்ஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டூடூட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில், ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் உருவான ’ஜோக்கர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்திற்கு ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளும் குவிந்தது.

வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய படமாக அமைந்தாலும் ’ஜோக்கர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை குவித்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை வாரனர் பிரதர்ஸ் மற்றும் டிசி காமிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி வந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி லேடி காகா நாயகியாக நடித்து வரும் ஜோக்கர் 2 படத்திற்கு ‘ஜோக்கர்: ஃபாலி அ டியூக்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் டிரைலரை மிகவும் ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment