'பாகுபலி' படத்தில் பணிபுரியும் ஹாலிவுட் எடிட்டர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் வெற்றிப்படமான 'பாகுபலி' கடந்த வெள்ளியன்று தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என நான்கு வெளியாகி இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக உலகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டிவிட்ட நிலையில், இந்த படத்தை ஆங்கிலத்தில் டப் செய்யும் முயற்சியில் படக்குழுவினர் முழூவீச்சில் இறங்கியுள்ளனர்.
உலகின் பல நாடுகளில் ஆங்கிலத்தில் விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தை ஆங்கில பதிப்பிற்காக பல காட்சிகள் எடிட்டிங் செய்யப்படவிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஒருசில பாடல் காட்சிகள் ஆங்கில பதிப்பில் கட் செய்யப்படலாம் என தெரிகிறது.
இந்த படத்தின் ஆங்கில பதிப்பை எடிட்டிங் செய்ய பிரபல ஹாலிவுட் எடிட்டர் வின்செண்ட் தபைய்லான் (Vincent Tabaillon) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன "The Incredible Hulk", "Clash of the Titans", "Taken 2", "Now You See Me" மற்றும் "The Legend of Hercules" போன்ற படங்களை எடிட்டிங் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட் படங்களுக்கு இணையான காட்சிகள் 'பாகுபலி'யில் இடம்பெற்றுள்ளதால், கண்டிப்பாக இந்த படம் உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com