'பிகில்' டிரைலரை பார்த்து அட்லியிடம் கேள்வி எழுப்பிய ஹாலிவுட் இயக்குனர்

  • IndiaGlitz, [Monday,October 14 2019]

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ’பிகில்’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த டிரெய்லர் வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே சுமார் 10 மில்லியன் பார்வையாளர்களையும் ஒரு மில்லியன் லைக்குகளையும் பெற்று யூடியூப்பில் சாதனை செய்துள்ளது.

மேலும் இந்த டிரைலரை கோலிவுட், டோலிவுட், பாலிவுட் திரையுலக பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக ஷாருக்கான் தனது சமூக வலைத்தளத்தில் விஜய், அட்லி, ரஹ்மான் ஆகியோருக்கு தன்னுடைய வாழ்த்துக்கள் என்றும் ’சக்தே இந்தியா’ படம் போல் ’பிகில்’ படம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ’பிகில்’ டிரைலரை பார்த்த பிரபல ஹாலிவுட் நடிகரும் இயக்குனருமான பில் டியூக் தனது சமூக வலைத் பக்கத்தில் இயக்குனர் அட்லீயின் ’பிகில்’ டிரைலர் சிறப்பாக இருந்ததாகவும், இந்த படம் அமெரிக்காவில் எப்போது ரிலீஸ் ஆகும்? என்றும், இந்த படத்தின் சிறப்பு காட்சி அமெரிக்காவில் திரையிடப்படுகின்றதா? என்றும் கேள்வி எழுப்பி, அதற்கான பதிலை தெரிவியுங்கள் என்று கூறியதோடு படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அட்லி, ’நன்றி சார் நிச்சயமாக அமெரிக்காவில் சிறப்பு காட்சி கொடுத்த தகவலை தெரிவிக்கிறேன்’ என்று கூறியுள்ளார், விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய படத்தை ஹாலிவுட் இயக்குனர் ஒருவரும் வெளிவரும் முன்பே பாராட்டியுள்ளது படக்குழுவினர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.