ஹாலிவுட் சினிமாவில் சூடு பிடித்திருக்கும் வேலை நிறுத்தம்… காரணம் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
வித்தியாசமான கதையம்சங்களையும் பல புதிய தொழில் நுட்பங்களையும் கொண்டது ஹாலிவுட் சினிமா. பல பிரம்மாண்டமான திரைப்படங்களைத் தயாரித்து வரும் ஹாலிவுட்டே ஸ்தம்பித்து போகும் அளவிற்கு கடந்த சில வாரங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் SAG எனும் நடிகர், நடிகைகள் உள்ள சங்கமும் இந்த போராட்டத்தில் இணைந்து உள்ளதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
ஹாலிவுட்டில் திரைக்கதை எழுத்தாளர்கள் உள்ளிட்ட கதாசிரியர்கள் அடங்கிய சங்கம் கடந்த 11 வாரங்களுக்கு முன்பு சம்பளப் பற்றாக்குறை காரணமாக வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். இதைத் தொடர்ந்து எந்த சினிமாவிலும் கதை சம்பந்தப்பட்ட வேலைகளில் அவர்கள் ஈடுபடாமல் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் எழுத்தாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தற்போது SAG (AFTRA) Screen Actors Guild American Federation of Television and Radio Artists எனும் அமைப்பும் இந்த வேலை நிறுத்தத்தில் இணைந்துள்ளது. SAG எனும் இந்த அமைப்பில் நடிகர், நடிகைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருபவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த SAG போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சங்கத்தில் உள்ள யாரும் திரைப்பட படப்பிடிப்பு மற்றும் திரைப்பட வெளியீட்டு நிகழ்வுகள் என எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகின்றனர். மேலும் பெரிய பெரிய நடிகர்கள் உள்ளிட்ட யாரும் புதிய படம் எதையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதனால் கடந்த சில வாரங்களாக ஒட்டுமொத்த ஹாலிவுட் சினிமா வட்டாரமும் இயங்காமல் இருக்கிறது.
படப்பிடிப்பை தவிர சினிமா நடிகர், நடிகைகள் யாரும் டப்பிங், நடனம், இசை போன்ற எந்த திரைப்பட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக்கூடாது என அறிவிக்கப்பட்ட இருக்கிறது. இதனால் சமீபத்தில் லண்டனில் நடைபற்ற கிறிஸ்டோபர் நோலனின் Oppenheimer திரைப்பட புரமோஷனுக்கு வந்த நடிகர், நடிகைகள் அந்த விழாவிலிருந்து கூட்டாக வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் அந்தத் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போகுமோ என்ற அச்சமும் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் 63 வருடங்களுக்குப் பிறகு பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் ஹாலிவுட் சினிமா கலைஞர்களின் போராட்டம் எப்போது இயல்புநிலைக்கு திரும்பும் என்று கேள்வி எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments