டென்னிஸ் சகோதரிகளின் வாழ்க்கை வரலாறு படம்: சிறந்த நடிகர் விருதை பெற்ற வில்ஸ்மித்!

அமெரிக்காவின் டென்னிஸ் சகோதரிகளின் வாழ்க்கை வரலாறு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் கிங் ரிச்சர்ட்.

இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக வில் ஸ்மித் ஆஸ்கர் விருதை பெற்றார். இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்ட போது அவர் கண்ணீர் மல்க அந்த விருதை பெற்றுக்கொண்ட காட்சியின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் 'தி பவர் ஆஃப் தி டாக்’ என்ற படத்தை இயக்கிய பெண் இயக்குனர் ஜேன் கேம்பியனுக்கு சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.