ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்க்க விரும்பிய ஹாலிவுட் நடிகர்.. கார்த்திக் சுப்புராஜ் பெருமிதம்..!

  • IndiaGlitz, [Thursday,December 14 2023]

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ’ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்பவருக்கு டேக் செய்து, ‘தமிழில் ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற படத்தை எடுத்திருக்கிறோம். நெட்பிளிக்ஸில் உள்ளது. இந்த படம் முழுவதும் உங்கள் பங்களிப்பை காட்சிப்படுத்தி உள்ளோம். அனிமேஷன் காட்சிகளில் உங்களுடைய இளம் வயதை காட்டி உள்ளோம். வாய்ப்பு கிடைத்தால் இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள்” எனக் கூறியிருந்தார்.

அதற்கு ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் தரப்பிடம் இருந்து பதில் வந்துள்ளது. அதில், கிளிண்ட் ஈஸ்ட்வுட் நீங்கள் சொன்ன படத்தைப் பற்றி அறிந்துள்ளார். இப்போது, நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் பணிகள் முடிந்ததும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பார்ப்பார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையறிந்த கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் ‘இதனை என்னால் முடியவில்லை. படத்தைப் பார்த்துவிட்டு ஈஸ்ட்வுட் கூறும் கருத்துகளுக்கு ஆவலாக காத்திருக்கிறேன். ஆசிர்வதிக்கப்பட்டவான உணர்கிறேன். இதை சாத்தியப்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி” என பதிவு செய்துள்ளார்.