ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகருக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்
- IndiaGlitz, [Thursday,March 12 2020]
சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் சீனா முழுவதும் பரவியது மட்டுமன்றி உலகம் முழுவதும் சுமார் 123 நாடுகளுக்கும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இந்த வைரசால் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர் என்பதும் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் முக்கிய விஐபிகளையும் விட்டு வைக்கவில்லை. ஈரான் நாட்டின் துணை அதிபர், ஈரான் நாட்டின் சுகாதார அமைச்சர் மற்றும் இங்கிலாந்து நாட்டின் சுகாதார அமைச்சர் ஆகியோர்கள் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் என்பவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை அவர் தனது சமூக தளத்தில் தெரிவித்து மக்கள் அனைவரும் கொரோனா வைரஸிலிருந்து தங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் மட்டுமின்றி அவரது மனைவிக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் தனது மனைவியுடன் டாம் ஹான்க்ஸ் ஆஸ்திரேலியா சென்று திரும்பி வந்ததை அடுத்து அவருக்கு கொரோனா வைரஸ் பரவியதாக தெரிகிறது. டாம் ஹாக்ஸ் ஆறு முறை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டு இரண்டு முறை அந்த விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
— Tom Hanks (@tomhanks) March 12, 2020