இதுவொரு சட்டவிரோத போர்: உக்ரைன் - ரஷ்ய போர் குறித்து பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இது ஒரு சட்ட விரோத போர் என்றும் ரஷ்ய மக்களைக் காப்பதற்கான போர் இல்லை என்றும் பிரபல நடிகர் அர்னால்ட் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு வீடியோ ஒன்றில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: எனது அன்பான நண்பர்கள் மற்றும் உக்ரைனில் போர் செய்து கொண்டிருக்கும் ரஷ்ய வீரர்களுக்கு இந்த செய்தி சென்று சேரும் என்று நான் நம்புகிறேன். இந்த போர் குறித்து உங்களிடம் மறைக்கப்படும் விஷயங்கள் பல உள்ளன. அவற்றை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
ரஷ்ய மக்களின் வலிமையும், இதயமும் எனக்கு எப்போதும் உத்வேகம் அளித்து உள்ளது. அதனால் தான் உக்ரைனில் நடந்த போரைப் பற்றிய உண்மையை உங்களுக்கு சொல்ல வேண்டுமென்று நான் விரும்புகிறேன். உக்ரைன் அரசுக்கு எதிரான போர் குறித்து ரஷ்ய அரசாங்கம் கூறிய தகவல் உண்மை இல்லை. இது அதிகாரத்தில் இருப்பவர்கள் தொடங்கிய போர். ரஷ்ய மக்கள் தொடங்கிய போர் அல்ல. மிருகத்தனமான தாக்குதல் காரணமாக தற்போது உலக நாடுகளில் இருந்து ரஷ்யா தனிமைப்படுத்தப் பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது போராடியவர்களில் எனது தந்தையும் ஒருவர். அவர் அந்த போரில் காயமடைந்ததால், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உடைந்து போனார். அதனால் வாழ்நாள் முழுவதும் அவர் வேதனையுடன் வாழ்ந்தார். இந்த நிலைமை உங்களுக்கு வர வேண்டும் என்று நான் விரும்பவில்லை.
இது ஒரு சட்ட விரோத போர். உங்களுடைய உயிர்கள், உறுப்புகள், உங்கள் எதிர்காலம் அத்தனையும் ஒரு அர்த்தமற்ற போருக்காக தியாகம் செய்யப்பட வேண்டுமா? ரஷ்ய அதிபர் புதினுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் தான் இந்த போரை தொடங்கினீர்கள், இந்த போரை நீங்கள் தான் வழி நடத்தி வருகிறீர்கள். எனவே நீங்களே இந்த போரை நிறுத்தலாம்’ என்று நடிக அர்னால்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் அர்னால்டு வேண்டுகோளை அடுத்து ரஷ்ய அதிபர் புதின் இந்த போரை நிறுத்துவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
I love the Russian people. That is why I have to tell you the truth. Please watch and share. pic.twitter.com/6gyVRhgpFV
— Arnold (@Schwarzenegger) March 17, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout