இந்தியா சிறந்தவர்களின் கரங்களில் இருக்கிறது: மோடியை புகழ்ந்த ஆஸ்கர் விருது பெற்ற நடிகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா சிறந்தவர்களின் கைகளில் இருப்பதாக நினைக்கிறேன் என 2 முறை ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் புகழாரம் சூட்டியுள்ளார்.
கோவாவில் தற்போது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் இந்திய திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி ஹாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டனர்
அந்த வகையில் 2 ஆஸ்கார் விருது 5 கோல்டன் குளோப் விருது உட்பட பல விருதுகள் பெற்ற ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் பேசினார். அவர் பேசிய போது ’78 நாடுகள் பிரதிநிதித்துவம் கொண்ட இந்த விழா தனித்துவம் மற்றும் அழகாக இருப்பதாக கருதுகிறேன்.
உலக அளவில் உலக அளவில் இந்திய திரைப்படங்களின் தாக்கம், பிரதிபலிப்பு சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் தயாரிப்புக்கு அதிக செலவு பணம் செலவு செய்வதை அறிகிறேன். இது இந்திய திரைப்படங்களுக்கு வெற்றிகரமான காலகட்டம்.
பல்வேறு மொழிகள் பேசும் நாம் சினிமா என்ற ஒரே மொழியின் கீழ் ஒன்றிணைகிறோம். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் ஒவ்வொரு இடத்திலும் என்ன நடக்கிறது என்பதை திரைப்படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். எனவே திரைப்படங்கள் நம்மை நெருக்கமாகின்றன. எனவே திரைப்படம் மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout