close
Choose your channels

'விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தில் ஹாலிவுட் நடிகர்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Wednesday, February 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்படங்களில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிப்பது தற்போது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் விக்ரம் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக்கி வரும் திரைப்படம் ’தங்கலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கலந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் என்பவர் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதை நடிகர் விக்ரம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்து உள்ளார். மேலும் ’தங்கலான்’ படக்குழு டேனியலை அன்புடன் வரவேற்கிறது என்றும் விக்ரம் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன பல வெற்றி படங்களில் நடித்த டேனியல் கால்டாகிரோன் தமிழ் படத்தில் அறிமுகம் ஆகி உள்ளதை அடுத்து ’தங்கலான்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயல் குறித்த கதையும் கொண்ட இந்த படம் நிச்சயம் தமிழ் சினிமாவின் வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment