அரசியலுக்கு வரும் இன்னொரு பிரபல நடிகர்: கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்பமாம்!
- IndiaGlitz, [Tuesday,July 13 2021]
திரை உலகில் உள்ள பிரபலங்கள் அரசியலுக்கு வருவது கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய நான்கு முதலமைச்சர்கள் திரையுலகைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அண்டை மாநிலமான ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என்டி ராமராவ் அவர்களும் திரை உலகைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததே. தென்னிந்தியா மட்டுமின்றி வட இந்தியாவிலும் பல பிரபல நட்சத்திரங்கள் அரசியலில் குதித்து உள்ளனர் என்பதும் மாநில அமைச்சர்களாகவும் மத்திய அமைச்சர்களாகவும் எம்பிக்களாகவும் இருந்து வந்துள்ளனர் என்பதும் தெரிந்ததே.
அதேபோல் உலகின் பல நாடுகளில் திரையுலக பிரபலங்கள் அரசியலுக்கு வந்து பெரிய பதவிகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் அவர்களும் விரைவில் அரசியலுக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளார். அவர் சீனாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியில் சேர இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சமீபத்தில் அளித்த பேட்டியில் சீன கம்யூனிச அரசு கொடுத்த வாக்குறுதிகளை மிகக் குறைந்த காலத்தில் நிறைவேற்றி விட்டதாகவும் எனவே சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர நான் ஆர்வமாக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். 67 வயதாகி உள்ள ஜாக்கிசான் தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டதால் அரசியலில் குதிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.