'தங்கலான்' படத்தின் அப்டேட் கொடுத்த ஹாலிவுட் நடிகர்.. வைரலாகும் பதிவு..!

  • IndiaGlitz, [Friday,November 17 2023]

ஹாலிவுட் நடிகர் தனது சமூக வலைத்தளத்தில் ’தங்கலான்’ படத்தின் அப்டேட்டை பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சியான் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’தங்கலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் அனைவரையும் கவர்ந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முக்கிய கேரக்டரில் நடித்த ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் என்பவர் தனது பகுதியின் டப்பிங் பணியை முடித்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ’தங்கலான்’ அற்புதமாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜுன் பிரபாகரன் மற்றும் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் ’தங்கலான்’ படத்தில் நடித்திருக்கிறார்கள். கிஷோர் குமார் ஒளிப்பதிவில், ஜிவி. பிரகாஷ் குமார் இசையில், ஆர்.கே. செல்வா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியாடிக் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

More News

உடம்பு சுகம் இல்லை என்றாலும் மனசு நன்றாக இருக்குது.. வைரலாகும் கமல்ஹாசன் ஆடியோ..!

உடம்பு சுகம் இல்லை என்றாலும் மனசு நன்றாக இருக்குது என்ற கமல்ஹாசன் ஆடியோவை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த ஆடியோ

சூப்பர் ஹிட் இந்தி படத்தின் தமிழ் உரிமையை வாங்கிய சூர்யா? அடுத்த படம் இதுதானா?

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் சூர்யா வாங்கி இருப்பதாகவும் இந்த படத்தில் அவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது  

ஜெயிலுக்கு போக முடியாது... விசித்ராவின் முடிவை அடுத்து கேப்டன் எடுத்த அதிரடி முடிவு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் விசித்ரா மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் மோசமாக விளையாடியதாகவும், இதனை அடுத்து இருவரும் ஜெயிலுக்கு போக வேண்டும் என்றும் அனைத்து

மகளின் 12வது பிறந்த நாள்.. ஐஸ்வர்யா ராயின் நெகிழ்ச்சியான வாழ்த்து: அசத்தல் புகைப்படங்கள்..!

நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் தனது மகளுக்கு நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்களை  இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு

நடிப்புக்கு முழுக்கு போட்டு  விட்டாரா அதிதி ஷங்கர்.. வைரல் புகைப்படங்கள்..!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் நடிகை அதிதி ஷங்கர், கார்த்தி நடித்த 'விருமன்'  என்ற திரைப்படத்தில் அறிமுகமான நிலையில் அதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படத்தில் நடித்தார்.