தமிழகப் பள்ளிகளுக்கு விடுமுறை??? இது குறித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் ஒவ்வொரு மாநில சுகாதாரத் துறை அமைச்சகமும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நேற்று கர்நாடக மாநிலத்தில் ஒரு பள்ளி மாணவி, கொரோனா பாதிப்பு இருப்பது தெரியாமல் பள்ளிக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கர்நாடகா, கேரள மாநிலம் முழுவதும் பல்வேறு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டன என்பதும் குறிப்பிடத் தக்கது. இதே நடவடிக்கை தமிழகத்திலும் தொடரப்படுமா? என்ற கேள்வியும் தமிழகத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை, மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜவேலு என்பவர் கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது கடினம். எனவே தமிழகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்து இருந்தார். மேலும் அந்த மனுவில் இது பொதுத் தேர்வுகள் நடக்கும் காலக் கட்டம். இந்தச் சமயத்தில் விடுமுறை அறிவித்தால் பெரிய அளவில் பாதிப்பு வராது எனவும் ராஜவேலு தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபரி ஏ.பி. சாஹி மற்றும் செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன. அனைத்துப் பள்ளிகளுக்கும் விழிப்புணர்வு சுற்றறிக்கைகள் அனுப்பப் பட்டு இருக்கிறது. மேலும், தமிழகப் பள்ளிகளில் கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை“ எனத் தெரிவித்து இருந்தார்.
தமிழக அரசின் விளக்கத்தை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட முடியாது என மறுத்துவிட்டனர். மேலும், கொரோனா பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்தினர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout