தமிழகப் பள்ளிகளுக்கு விடுமுறை??? இது குறித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

  • IndiaGlitz, [Thursday,March 12 2020]

 


இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் ஒவ்வொரு மாநில சுகாதாரத் துறை அமைச்சகமும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நேற்று கர்நாடக மாநிலத்தில் ஒரு பள்ளி மாணவி, கொரோனா பாதிப்பு இருப்பது தெரியாமல் பள்ளிக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கர்நாடகா, கேரள மாநிலம் முழுவதும் பல்வேறு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டன என்பதும் குறிப்பிடத் தக்கது. இதே நடவடிக்கை தமிழகத்திலும் தொடரப்படுமா? என்ற கேள்வியும் தமிழகத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை, மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜவேலு என்பவர் கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது கடினம். எனவே தமிழகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்து இருந்தார். மேலும் அந்த மனுவில் இது பொதுத் தேர்வுகள் நடக்கும் காலக் கட்டம். இந்தச் சமயத்தில் விடுமுறை அறிவித்தால் பெரிய அளவில் பாதிப்பு வராது எனவும் ராஜவேலு தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு நீதிபரி ஏ.பி. சாஹி மற்றும் செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன. அனைத்துப் பள்ளிகளுக்கும் விழிப்புணர்வு சுற்றறிக்கைகள் அனுப்பப் பட்டு இருக்கிறது. மேலும், தமிழகப் பள்ளிகளில் கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை“ எனத் தெரிவித்து இருந்தார்.

தமிழக அரசின் விளக்கத்தை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட முடியாது என மறுத்துவிட்டனர். மேலும், கொரோனா பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்தினர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
 

More News

ரஜினியின் முடிவை வரவேற்கிறோம்: சீமான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

போங்கய்யா நீங்களும் உங்க கொரோனாவும்: 'கோப்ரா' இயக்குனர் அதிருப்தி

விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கி வரும் 'கோப்ரா' திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில்

எண்டெமிக்.. எபிடெமிக்.. பாண்டமிக்.. அப்படினா என்னனு தெரியுமா..?! #COVID19pandemic

இன்று உலக சுகாதார நிறுவனமானது கொரோனா வைரஸினை உலகமுழுக்க பரவியுள்ள பெருந்தொற்று நோயாக(pandemic) அறிவித்துள்ளது.

கொஞ்சம் இதையும் கவனிங்க... பிரதமருக்கு ராகுல் காந்தி கூறியிருக்கும் அறிவுரை!!!

முன்னதாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பத்திற்கு பா.ஜ.க வே காரண

தனிக்கட்சியெல்லாம் வேண்டாம்.. ரஜினி பாஜக-வில் சேர வேண்டும்..! பொன்.ராதாகிருஷ்ணன்.

ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என்பதே எங்கள் எல்லோரது விருப்பமாக இருக்கிறது. ஆனால் இந்த தருணத்தில் அவர் தனிக்கட்சி ஆரம்பிக்கப்போவதாக சொல்வது சரியாக இருக்காது