ரஜினிக்கு மட்டும் ஹோலி பண்டிகை என்பது ஒரு ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நாடு முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் ரஜினி வீட்டில் நடந்த ஹோலி பண்டிகை குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரஜினியை பொருத்தவரை பர்சனலாக ஹோலி பண்டிகை என்பது ஒரு ஸ்பெஷல் நாள் ஆகும். ஏனெனில் கடந்த 1975 ஆம் ஆண்டு ஹோலி பண்டிகை தினத்தில் தான் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்கள் சிவாஜி ராவ் என்ற அவரது பெயரை ரஜினிகாந்த் என்று மாற்றினார். அதன் பிறகு தான் ரஜினிகாந்த் அடுக்கடுக்கான வெற்றிகளை கொடுத்து கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். அதனால் தான் ரஜினி வீட்டில் ஹோலி பண்டிகை சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று நடந்த ஹோலி பண்டிகையின்போது ரஜினிகாந்த் தனது குடும்பத்தினர் உடன் கொண்டாடிய புகைப்படங்களை அவரது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக சௌந்தர்யா பதிவு செய்த புகைப்படத்தில் அவருக்கு சமீபத்தில் பிறந்த மகன் புகைப்படத்தை பார்த்த நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஐஸ்வர்யா பகிர்ந்த புகைப்படத்தில் இது ஹோலி பண்டிகை மட்டுமல்ல, சிவாஜி ராவ் ரஜினியாக மாறிய நாள் என்றும் பாலச்சந்தர் தாத்தா அவர்களை என்றும் நினைவில் வைத்திருப்பேன் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
Happy holi ❤️🤗😊🙏🏻😀 pic.twitter.com/U93XFnX885
— soundarya rajnikanth (@soundaryaarajni) March 25, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments