ரஜினிக்கு மட்டும் ஹோலி பண்டிகை என்பது ஒரு ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,March 26 2024]

நாடு முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் ரஜினி வீட்டில் நடந்த ஹோலி பண்டிகை குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரஜினியை பொருத்தவரை பர்சனலாக ஹோலி பண்டிகை என்பது ஒரு ஸ்பெஷல் நாள் ஆகும். ஏனெனில் கடந்த 1975 ஆம் ஆண்டு ஹோலி பண்டிகை தினத்தில் தான் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்கள் சிவாஜி ராவ் என்ற அவரது பெயரை ரஜினிகாந்த் என்று மாற்றினார். அதன் பிறகு தான் ரஜினிகாந்த் அடுக்கடுக்கான வெற்றிகளை கொடுத்து கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். அதனால் தான் ரஜினி வீட்டில் ஹோலி பண்டிகை சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று நடந்த ஹோலி பண்டிகையின்போது ரஜினிகாந்த் தனது குடும்பத்தினர் உடன் கொண்டாடிய புகைப்படங்களை அவரது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக சௌந்தர்யா பதிவு செய்த புகைப்படத்தில் அவருக்கு சமீபத்தில் பிறந்த மகன் புகைப்படத்தை பார்த்த நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஐஸ்வர்யா பகிர்ந்த புகைப்படத்தில் இது ஹோலி பண்டிகை மட்டுமல்ல, சிவாஜி ராவ் ரஜினியாக மாறிய நாள் என்றும் பாலச்சந்தர் தாத்தா அவர்களை என்றும் நினைவில் வைத்திருப்பேன் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

More News

அநியாயம் பண்ணாதீங்க.. வெங்கட்பிரபுவின் சிறப்பான 'கோட்' அப்டேட்..!

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம்'கோட்'.

விலைமாது முதல் புரட்சித்தலைவி வரை.. காங்கிரஸ் பிரமுகருக்கு பதிலடி கொடுத்த கங்கனா ரனாவத்..!

இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் பாஜக வேட்பாளராக போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

திரைப்பட நாயகி மற்றும் நடன தாரகை மேஜிக் ராதிகா பகிர்ந்த பல நெகிழ்ச்சியான கலைத்துறை தகவல்கள்.

எங்களுக்கு அவர்கள் மீதும் ,இந்த துறையின் மீதும் ஒரு பக்தி.மேலும் சிவாஜி அண்ணா கூட நடித்ததெல்லாம் ஒரு அழகான நெகிழ்ச்சியான அனுபவம் .....

'குக் வித் கோமாளி 5' நிகழ்ச்சியில் ஜோவிகா? வனிதா கூறிய ஆச்சரியமான பதில்..!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சொல்லாமல் கொள்ளாமல் ரகசிய திருமணம்.. 2 நாள் கழித்து டாப்சிக்கு ரசிகர்கள் வாழ்த்து..!

நடிகை டாப்சி எந்தவித விளம்பரமும் இன்றி, அறிவிப்பும் இன்றி, தான் காதலித்த நபரை இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில்  இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் தற்போது அவருக்கு வாழ்த்துக்களை