close
Choose your channels

மனைவியை கொன்ற லாரி… கதவைப் பிடித்தபடியே 30 கி.மீ தொங்கிய கணவன்… சோகச் சம்பவம்!

Monday, March 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரேசில் நாட்டில் தன்னுடைய மனைவியை இடித்துத் தள்ளிவிட்டு சென்ற லாரியை நிறுத்துமாரி கேட்டு ஒருவர் 30 கி.மீ வரை லாரியின் கதவைப் பிடித்தப்படியே தொங்கிய சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த வீடியோ வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

49 வயதான அன்டோனியா பெரிரேடா என்பவரும் அவருடைய மனைவி சான்ட்ராவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்குப் பின்னால் வந்த லாரி டிரைவர் ஒருவர் கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தின் மீது மோதி இருக்கிறார். இதனால் இருசக்கர வாகனத்தில் வந்த சான்ட்ராவுக்கு படுகாயம் ஏற்பட்டு இருக்கிறது. இப்படி தன்னுடைய மனைவியை இடித்துத் தள்ளிவிட்டு லாரியை நிறுத்தாமல் செல்வதை பார்த்து அன்டோனியா அந்த லாரியின் கதவை பிடித்தப்படி டிரைவரிடம் சண்டைப் போட்டுள்ளார்.

ஆனால் இதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாத லாரி டிரைவர் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் 30 கி.மீ வரை லாரியை படு வேகத்தில் இயக்கி இருக்கிறார். இதை வழியில் பார்த்த சிலர் லாரியை கடினப்பட்டு நிறுத்தியதோடு அந்த டிரைவரைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்து உள்ளனர். மேலும் கதவை பிடித்து தொங்கிய படியே 30 கி.மீ வரை பயணித்த அன்டோனியாவிற்கு காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

ஆனால் இதற்கிடையில் படுகாயம் அடைந்த சான்ட்ராவை வழிப்போக்கர்கள் சிலர் சேர்ந்து மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கஞ்சா போதையில் லாரியை இயக்கிய டிரைவர் மீது கொலை வழக்கு, சாலை விதிகளை மீறிய வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment